நாடாளுமன்றத்தில் இன்று ஹிருணிக்கா செய்த மோசமான செயல் ! வெளியான ஆதாரம் ! படம் உள்ளே

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.

இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவர் உரையாற்றி கொண்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

அதன் பின் மீண்டும் அவர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டார். இந்த காட்சி நாடாளுமன்றத்தில் உள்ள கமராவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. முக்கியமான அமர்வின் போது ஹிருணிக்காவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.