பசிக் கொடுமையால் தன் காலையே கடித்து தின்ற கொடூரம்… அதிர்ச்சி புகைப்படம்

0

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நோவா ஆர்க் மீட்பு குழுவினர் கடந்த மாதம் இ-மெயில் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

அதில் லூக் என்ற பெயருடைய நாய் பசியால் இறக்கும் நிலைக்கு ஆளானதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விலங்குகள் நல வாரியக் குழுவினர் சென்றுள்ளனர். அங்கு ஏராளமான நாய்கள் இருந்தன. அவற்றில் லூக் என்ற நாய் பசிக் கொடுமையால் தனது காலையே கடித்து தின்றுள்ளது.

கடந்த இரு வாரங்களாக உணவின்றி தவித்து வந்துள்ளது. அதன் உரிமையாளர் போதிய உணவு அளிக்கவில்லை. உடனடியாக நாயை மீட்டு உணவு அளித்து பராமரித்து வருகின்றனர்.

இதேவேளை, லூக்கின் உரிமையாளருக்கு நிச்சயம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.