பாஜக செல்வாக்கை இழந்துவிட்டது – ரஜினிக்கு லேட்டாக புரிந்த உண்மை!

0

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட பேரவைக்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்றது. இதில், ஐந்து மாநிலங்களிலும் கடுமையான சரிவினை கண்டுள்ளது பாஜக. தொடர்ச்சியான மக்களுக்கு எதிரான செயற்பாடுகள், கார்ப்பரேட் ஆதரவு போக்கு, நிறைவேற்றப்படாத வாக்குறுதி ஆகியவற்றின் காரணமாகவே பாஜக இந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை காண்கையில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது வெளிப்படையாக தெரிகிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள ரஜினி பாஜகவின் தீவிர ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.