பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான உலகமே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது ! தனது தலையில் தானே மண் அள்ளி போட்ட மகிந்த

0

ஜனாதிபதியின் பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான தீர்ப்பினை உயர்நீதிமன்றம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது .ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு சற்று முன் வரலாற்று தீர்ப்பினை வழங்கியுள்ளது .

ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றினை கலைத்தமை அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் , நான்கரை வருடங்கள் முடியும் முன்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றினை கலைக்கும் அதிகாரம் இல்லை எனவும் உயர்நீமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது .

உயர்நீதிமன்றின் இந்த தீர்ப்பின் மூலம் இலங்கையில் இடம்பெற்று வந்த அரசியல் பிணக்கு முடிவுக்கு வந்துள்ளது .

உயர்நீதிமன்றின் தீர்ப்பின் பிரகாரம் மைத்திரியினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பிரதமராக தனது பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட முதலாவது தடவை இது என்று தெரிவிக்கப்டுகின்றது .

உயர்நீதிமன்றின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ரணில் தரப்பு ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதிமன்றின் தீர்ப்பினை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.