பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா தப்பி ஓட்டம்

0


பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில பொலிஸ் அதிகாரி தயானந்தா விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி கர்நாடக பொலிஸ் அதிகாரி தயானந்தா கருத்துத்த தெரிவிக்கையில்,

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என நான் நினைக்கவில்லை. அவர் மீது முக்கிய வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில்  காலாவதியான அவரது கடவுச்சீட்டு (Pயளளிழசவள) புதுப்பித்து வழங்க பொலிஸ் தரப்பில் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சட்டத்துக்குட்பட்டு வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. அவர் வடஇந்தியாவில் இருக்கலாம். இதுபற்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்து’ என்க் கூறினார்.

தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார், கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில அமைந்துள்ள, இவருடைய ஆசிரமத்தில் வைத்து,  பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவிற்கு எதிராக வழக்கத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன்.

கடந்த ஒரு மாதமாக நித்யானந்தா தனது ஆசிரமத்திலிருந்து தலைமறைவாகியுள்ளர்.

இந்தநிலையில், அவர் வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றுள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்ற நிலையில்,  இதுகுறித்து கர்நாடக மாநில பொலிஸ் அதிகாரி  விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.