பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படப்போகும் மஹிந்த?

0

ஸ்ரீலங்காவில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் பிரதமராக இருந்து வருகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் புதன்கிழமை பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி சிறிசேன நடாத்திய பேச்சுவார்த்தையின் போது, மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அத்துடன் புதிய பிரதமரை நியமிக்குமாறு, எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதையடுத்து இந்த தீர்மானம் ஜனாதிபதி சிறிசேனவிற்கு அனுப்பப்பட்டு, அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், மஹிந்த ராஜபக்சவை பதவிநீக்கம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்சவை பதவிநீக்கம் செய்வதை விட வேறு வழியில்லை என்ற நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலையும் தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது.

தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்பதில், மைத்திரி உறுதியாக இருக்கின்ற நிலையில், அவரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சிறிலங்கா ஜனாதிபதி இன்று மீ

Leave A Reply

Your email address will not be published.