பிரதமர் பதவி பறிபோக பிரபாகரன்தான் காரணமாம்!

0


ஈழத் தமிழர்கள் பிரபாகரன் பெயரை உச்சரிக்ககூடாது, அவரின் படங்களை வைத்திருக்ககூடாது, அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர், பயங்கரவாதி என்றெல்லாம் சிங்கள அரசு பேசியது.

குறிப்பாக மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியும் நடைமுறைப்படுத்தியும் ஈழத் தமிழ் மக்களை துன்புறுத்தியுள்ளார். பிரபாகரன் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்காக சிறையில் உள்ள சிறுவர்கள்கூட ஈழத் தீவில் உள்ளனர். 


அதுசரி, எங்களை பிரபாகரனின் பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நீங்கள் தினமும் பிரபாகரன் பெயரை சொல்கிறீர்களே? இப்போது மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி போனதிற்கும் பிரபாகரன் தான் காரணமாம். இலங்கையில் காற்று வீசினால், புயல் அடித்தால், வெள்ளம் வந்தால் எல்லாவற்றுக்கும் பிரபாகரன்தான் காரணம் என்று சொல்லுகின்ற அளவில் மகிந்த குழுவுக்கு புலிக்காய்ச்சல். 

பதவி விலகும் மகிந்த. சிரித்து மகிழும் மகிந்த கூட்டம்


மகிந்த ராஜபக்ச இலங்கையின் திடீர் பிரதமரானார். ஐம்பது நாட்கள் பிரதமராக இருந்துவிட்டார். தனக்கு துரோகம் இழைத்த மைத்திரியை கையிற்குள் போட்டுக் கொண்டு, ரணிலை கவிழ்த்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கைப்பற்றினார். உலகில் நடந்திராவ கையில் மிகவும் கேவலமான வழியில் மகிந்த இவ்வாறு நடந்துகொண்டார்.

சரித்திரக் கதைகளில் படித்த, கேள்விப்பட்ட சதிகளையும் கவிழ்ப்புக்களையும் மகிந்த ராஜபக்ச நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார். அந்த சதிக்கும் கவிழ்ப்புக்கும் உரிய பரிசையும் பதிலையும் 50 நாட்களிலேயே மகிந்த பெற்றுக் கொண்டார் என்பதுதான் கூடுதல் மகிழச்சி. மகிந்த பிரதமராக பதவி ஏற்றதுடன் வெடி கொளுத்திக் கொண்டாடிய ஒட்டுக்குழுக்கள் இனி என்ன செய்வார்கள்? 


மகிந்த பதவி ஏற்றவுடனேயே ரூபவாகினிக்குள் நுழைந்த மகிந்த குழு எல்லாவற்றையும் அடித்து நொருக்கியது. ஊடக சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை, மக்களின் வாழ்வு சுதந்திரத்தை மதிக்கத் தெரியாத காட்டுக் கூட்டமாக வன்முறைக் குழுவாக மகிந்த குழு மீண்டும் தலை தூக்கியது. ஆனால் மகிந்த குழுவுக்கு அடிக்கப்பட்ட ஆப்பு நன்றாக கண்ணுக்கு தெரிந்த வித்தில் அடிக்கப்பட்டது. ஆப்பை மகிந்தவே தேடிக் கொண்டார் என்பதுதான் உண்மை. 

மைத்திரி மகிந்த க்கான பட முடிவு


சரி, எதற்காக இப்போது மகிந்த ராஜினா செய்யும் படம் காட்டுகிறார். மைத்திரிபால சிறிசேன என்ற முட்டாள், பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்று இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் பின்னர், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததும் பிழை. மகிந்தவின் பிரதமர் பதவிக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச பேசாமல் வீட்டுக்குப் போக வேண்டியதுதானே. 


ராஜினாமா, செய்யவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் மகிந்தவுக்கு தேவையில்லை. இதை நாம் சொல்லவில்லை. சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டேன், ஈழத் தமிழர்களை அழித்துவிட்டேன் என்று மார்தட்டிய ராஜபக்சவுக்கு மைத்திரி நன்றாக செய்துவிட்டார். ஈழத் தமிழ் மக்கள் நினைத்தால்கூட இப்படிச் செய்ய இயலாது. 


விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்ததை செய்தது நானே என்று ராஜபக்ச உலகம் முழுவதும் பீற்றித் திரிந்தார். இதனால் அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழ விடுதலைப் புலிப் போராளிகள்மீது மிகவும் கோரமான முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தை, குட்டிகளுடன் காணாமல் ஆக்கப்பட்டனர். 


இத்தனை பாவங்களையும் செய்துவிட்டு மகிந்த ராஜபக்ச பாரிய மன்னராக வலம் வந்தார். அவருக்கு முதல் தோல்வியை 2015இல் ஈழ மக்கள் வழங்கினார்கள். 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் காரணமாக ராஜபக்ச தோல்வியை தழுவினார். இந்த மரண அடியால் மிகிந்த பெரும் மன அழுத்த்திற்கு உள்ளாகினார். பின்னர் சதிமூலம் ஆட்சியை கடந்த ஒக்டோபர் கைப்பற்றினார். 

மகிந்த க்கான பட முடிவு


தற்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு கை கொடுத்தமை காரணமாக மகிந்த பதவியை இழந்துள்ளமையால் மீண்டும் ஈழத் தமிழ் மக்கள்மீதே ராஜபக்ச பகையை அதிகரித்துள்ளார்.

சம்பந்தர்தான் இலங்கையின் நிழல் பிரதமராம். சுமந்திரன் என்ற பிரபாகரனால்தான் பிரதமர் பதவி பறிபோனதாம். மகிந்த கூட்டம் புலம்பத் தொடங்கியுள்ளது. அத்துடன் ரணில் தமிழீழத்தை எழுதிக் கொடுக்கப் போகிறார் என்றும் மகிந்த கூட்டம் அலம்புகின்றது. 


ரணில் என்ற நரியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுவது தமிழ் மக்களுக்கு பிடித்த காரியம் இல்லை. ஆனால் மகிந்த வெல்லக்கூடாது. மகிந்த தோற்க வேண்டும். தோல்வியை தழுவ வேண்டும். தமிழ் மக்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இது. ஈழத் தமிழ் மக்களை துடிதுடிக்க இனப்படுகொலை செய்த மகிந்தவின் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. மகிந்த தினமும் சாக நேரிடும். ஒன்றரை இலட்சம் ஈழ ஆன்மாக்களும் மகிந்தவை மன்னிக்காது. 

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.

15.12.2018

Leave A Reply

Your email address will not be published.