பிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச!

0

1987 – 1990 காலக்கடத்தில் பிரபகரனை தேசிய வீரர் என பிரேமதாச உட்பட பலர் போற்றி இருக்கிறார்கள். தயான் ஜெயதிலகவின் அப்பா மேர்வின் தனது லங்கா காடியன் இதழில் புயலின் மையமென அட்டைப்பட கட்டுரை எழுதினார்.(Prabhakaran ‘Man of the Decade’: The Eye of the Storm by Mervyn de Silva- Lanka Guardian, Colombo, January 1, 1990)
.
இக்காலக் கட்டத்தில் ஜெவிபி அமைப்பினர் ஆயுதகடத்தலில் புலிகளுக்காக ஆயுதங்களை தோழில் சுமந்து உதவியிருக்கிறார்கள். இதற்க்கு இந்தியாவை எதிர்த்தது ஒரு காரணம். மறு காரணம் திருகோணமலையில் இருந்து சிங்களவர்களை மிரட்டிக் இந்திய இராணுவம் குடியெழுப்பியபோது இந்தியாமீதான புலிகளின் தாக்குதல் ஆரம்பித்தமையாகும். அமரிக்கா இறங்கினாலும் அடிப்பேன் என்று பிரபாகரன் 1987-1990 காலக் கட்டத்தில் கூறியதாக கேழ்விபட்டிருக்கிறேன். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது அமரிக்கா மூன்றாவது நாட்டு ஒன்றிடம் சரணடையும்படி புலிகளைக் கேட்டது. ஏதோ ஒரு வடிவத்தில் தலையிடும் நோக்கம் அமரிக்காவுக்கு இருந்தது. இதற்க்கு சாதகமாக பிரபாகரன் செயல்படவில்லை. அதற்க்கு தமிழகத்தில் இருந்து “காங்கிரஸ் ஆட்ச்சி வீழ்ந்து பிஜேபி வரப்போகிறது அவசரப்பட்டு சரணடைய வேண்டாம்” என முக்கிய தமிழ் உணர்வாளர்கள் சிலர் அனுப்பிய பொருளற்ற ஊக misleading சேதியை பிரபாகரன் நம்பியதுதான் முக்கிய காரணம் என்கிற கருத்துள்ளது. ரஜீவ் கொலைக்கு பிறகு பிரபாகரன் இல்லாத புலிகள் அல்லது பிரபாகரனின் மரணம்வரைக்கும் போர் என்பதுதான் சகல இந்திய தேசிய கட்ச்சிகளின் நிலைபாடாக இருந்தது.
.
1987ல் பாலகுமாரன் முன்னெடுத்த (நாங்கள் ஆதரித்த) ஆயுதத்தைக் கீழே வைக்காமல் 13ம் திருத்த அடிப்படையிலான வடகிழக்கு அரசை ஏற்று இந்தியாவுடன் சமரசம் செய்யும் திட்டதை பிரபாகரன் ஏற்றிருந்தால் அல்லது 2009ல் அமரிக்காவின் மூன்றாவது நாட்டிடம் சரணடையும்படியான கோரிக்கையை ஏற்றிருந்தால் இன்று நிலமை வேறாக இருந்திருக்கும்.

சர்வதேச அரசியல் மட்டத்தில் உறவுகளை வைத்திருக்கும் ஒரு சிங்கள நன்பரைச் சந்திக்கும்போது அவர் ” தமிழரைவிட சிங்களவர்தான் பிரபாகரனுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றார் ஏன் என்றேன் அவர் “இந்திய ஆமியை எதிர்த்து அவர்களை வெளியேற்ற உதவினார் இல்லையேல் இந்திய இராணுவம் இன்றும் இங்கு நிலைத்திருக்கும். மற்றும் . இறுதிப்போரில் இலங்கையில் அமெரிக்கா தரை இறங்க முயற்சித்ததாகவும் அதற்கு பிரபாகரனின் அபிப்பிராயம் கேட்கப்பட்டதாகவும் அப்போது அவர் மக்களை வேணுமானால் கப்பல்மூலம் காப்பாற்றுங்கள் ஆணால் நீங்கள் தரை இறங்கினால் உங்களையும் அடிப்போம்” என்றாராம் அப்படி அவர் அதற்கு உடன் பட்டிருந்தால் இப்போ இலங்கையில் அமெரிக்க இராணுவம் இன்றும் நிலை கொண்டிருக்கும். பிரபகரன் உண்மையான ஏகாதிபத்திய எதிர்பாளி என்றார். இது உண்மையோ தெரிய வில்லை ஆனால் பிரபாகரனையும் புலி இயக்கத்தையும் இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் அடிவருடியாக சதா சித்தரித்துக் கொண்டிருக்கும் நமது தமிழ் இடதுசாரிகளை நினைக்கும்போது பரிதாபமாக இருக்குதல்லவா?

கவிஞர் ஜெயபாலன்

Leave A Reply

Your email address will not be published.