பிரபாகரன் ஆசைப்படி மகிந்தவை கொன்று வீச சதி!

0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆசைப்படி மகிந்த ராஜபக்சவை கொன்று வீச மேற்கத்தேய நாடுகள் முயற்சிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகவே, ரணிலின் பிரதமர் பதவியை விடவும், சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காப்பாற்ற அந்த சக்திகள் ஒன்றிணைந்து போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை அகுரஸ்ஸயில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது-

”மேற்குலகம் அணிதிரண்டு, பிரபாகரனைக் காப்பாற்ற வேண்டுமென கூறியபோது, அமெரிக்க விமான மற்றும் கடற்படை அதற்கு தயாராக இருந்தபோது, நாம் முல்லைத்தீவினை நோக்கி படையெடுப்போம் என முதுகெழும்புடன் தீர்மானம் எடுத்த தலைவர் மஹிந்த.

அவ்வாறான ஒரு தலைவரே, நாடு குறித்து சிந்தித்து பதவியை விட்டுக்கொடுத்தார். நீங்கள் தேர்தல் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்தும் கேட்கலாம். இதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாத்திரம் அல்ல, மஹிந்தவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அகற்றவே முயற்சிக்கின்றனர்.

ஏன் இந்த வைராக்கியம்? மஹிந்த இந்த நாட்டிற்கு என்ன பாவம் செய்தார்? அவரை நாடாளுமன்ற பதவியிலிருந்து அகற்றி, சிறையில் அடைத்து, கொலைசெய்து, ஓரத்தில் தூக்கிவீசும் தேவை யாருக்கு இருக்கிறது?

2009 மே 19ஆம் திகதி அதிகாலை முடிவடைந்த யுத்தத்தில், பிரபாகரன் எதனைச் சிந்தித்தாரோ, எதனை யோசித்தாரோ அதற்கு உயிர்கொடுக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து காப்பாற்ற, முயற்சித்ததை விடவும், சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காப்பாற்ற மேற்கத்தேய சக்திகள் ஒன்றிணைந்து போராடுகின்றன” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.