புதிய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக காணப்பட்ட அரசாங்கத்திலும் மங்கள சமரவீரவே நிதியமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் நிதியமைச்சை ரவி கருணாநாயக்க கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த அமைச்சுப் பொறுப்பு மீண்டும் மங்களவிற்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.