பூட்டை உடைக்க முயற்சி ; விஷாலை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்.!

0

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை வைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், சங்கத்தின் பொதுக்குழு -செயற்குழு உள்ளிட்ட அமைப்புகளில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு சங்க பணத்தை கையாடல் செய்ததாகவும் தெரிவித்து நேற்றைய தினம் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரித்தீஷ், எஸ்.வி சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டி விட்டு காவல்துறையிடம் சாவியை ஒப்படைக்க உள்ளதாக சொல்லி சென்றனர்.

இந்த நிலையில், இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஷால், பூட்டப்பட்டிருந்த தயாரிப்பாளர் சங்கத்தினை திறக்க முயன்றதுடன், அங்கு வந்த காவல்துறையிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறையையும் அவர்களது பணியை செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்த நிலையில் விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை.

முன்னதாக, முறைகேட்டில் ஈடுபட்டு வரும் விஷால் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.