அமெரிக்காவில் குழந்தையை கொலை செய்து துர்நாற்றம் தாங்க முடியாது என்பதால் குளிர்சாதனை பெட்டியில் அடைத்து வைத்த தாய், தற்போது சிறையில் இருந்து வெளிவர பிணைத்தொகையை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அலபாமாவில் உள்ள டோத்தனைச் சேர்ந்தவர் அமண்டா ஓக்ஸ், என்ற 36 வயது பெண், இவர் கடந்த ஜூன் மாதம் பேஸ்புக் நேரலையில், தன்னுடைய மகளுக்கு ஊக்கமருந்தினை ஊசியின் மூலம் உட்செலுத்தி கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு துர்நாற்றம் வீசும் என்பதற்காக குழந்தையின் சடலத்தை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்திருந்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் அமண்டா, வெளியில் வருவதற்காக அவருடைய பிணைத்தொகையை $400,000 டொலர்களில் இருந்து குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார், இதற்கு சமூக அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.