மறுமணம் செய்தாரா மஹிந்த?

0

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முஸ்லிம் பெண் ஒருவரை மறுமணம் முடித்துள்ளதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவருகின்றது.

எவ்வாறாயினும் அதில் உண்மைத்தன்மை எதுவுமில்லை என தகவல் கிடைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ களுத்துறை மாவட்டம் பேருவளையில் நடைபெற்ற முஸ்லிம் திருமணமொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய முறைப்படி மணமகளை பெரியவர் ஒருவர் ஆசீர்வதிப்பதற்காக அவருக்கு அருகில் அமர்வது சம்பிரதாயமான வழக்கமாகும் எனவும் அதன்படியே மஹிந்த ராஜபக்‌ஷ மணமகளுக்கு அருகில் அமர்ந்திருந்தார் எனவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலைமையைத் தோற்றுவிப்பதற்காகவும், சர்ச்சைக்குரிய பிரதமரான மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பில் மேலும் சர்ச்சையினைத் தோற்றுவிப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான வதந்திகள் பரவவிடப்படுவதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இதேவேளை குறித்த திருமண நிகழ்வில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்தவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.