மஹிந்தவின் இடைக்கால தடைக்கு எதிரான மனு: மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஆரம்பத்தில் விசாரணையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விசாரணையை நாளை மறுதினம் வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மஹிந்தவின் இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, மனு மீதான விசாரணையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால்  விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு குறிப்பிட்டு மஹிந்த ராஜபக் தரப்பினரால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.