மஹிந்த செய்த முட்டாள்தனம் ! அம்பலப்படுத்திய சிரேஷ்ட சட்டத்தரணி

0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முட்டாள்தனமாக செயற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச இவ்வாறான செயற்பாட்டை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த செய்தது பாரிய முட்டாள் தனமான செயல். அவருக்கு யார் ஆலோசனை வழங்கியதென தெரியவில்லை. அவரது சட்டத்தரணிகள் இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்களா என்ற பிரச்சினை உள்ளது.

சில காலம் நானும் அவருடன் சட்டத்தரணியாக செயற்பட்டேன். அந்த காலத்தில் நான் வழங்கிய ஆலோசனைகளை அவர் சரியாக செய்தார். இதுவரையில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களை அனுமதிக்க முடியாது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கமைய தற்போது நாட்டில் பிரதமர் அல்லது அமைச்சரவை ஒன்று இல்லை.

நாட்டில் மிகவும் மோசமான நிலையற்ற தன்மை ஒன்று ஏற்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவுக்கு தீர்மானம் மேற்கொள்வதற்கு அதிகாரம் உள்ளது.

இந்த நேரத்தில் மிகவும் சரியான தீர்வுகளை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

அத்துடன் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு அரசியலமைப்பு சட்டங்கள் இல்லை என்றாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கான சூழல் உள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.