முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு !

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் என சந்தேகிக்கப்படும் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5 81 மில்லிமீட்டர் எறிகணை -01 81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1 என்பனவே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பிரதேச கட்டளை அதிகாரி, உதவி பொலிஸ் அதிகாரி பியனந்த ஆகியோரது ஆலோசனைக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி டி எப் யு கே அபேரத்ன தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் எந்துலால், பொலிஸ் சாஜன்ட் 35259 பிரசன்ன, பொலிஸ் கொஸ்தாபல் கலான 90769, பண்டார 11289, ஜஜசுந்தர 68285 , சுரங்க 90585, ரத்னாயக்க உள்ளிட்டவர்களால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.