முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குள் மக்களை அச்சுறுத்திய அதி நவீன சாதனம்! (படங்கள்)

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதமளவில் அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 671 ஆவது நாளாக இன்றும் கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 க்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் இன்றைய தினம் மக்கள் தமது காணிக்குள் தாமாக செல்வதாக தெரிவித்து உடமைகளுடன் சென்றபோது இராணுவ வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது பெருமளவான பொலிஸார் கொண்டுவந்து குவிக்கப்பட்டதோடு மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவம், பொலிஸ், புலனாய்வாளர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்து வீடியோ பதிவு செய்து மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த முகாமுக்குள் இராணுவத்தின் அதி நவீன தானியங்கி கமெரா இயங்கியமை தெரியவந்தது. இது ஒவ்வொரு மக்களையும் மிகத் துல்லியமாக படமெடுக்கும் என்பதால் இதுகுறித்து மக்கள் மத்தியில் சற்று பதற்ற நிலைமை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.