மைத்திரிக்கு எதிராக கொழும்பில் திரண்ட ஓரினச் சேர்க்கையாளர்கள்! ரணிலின் ஏற்பாடா?

0

நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுடன், சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்காக மன்னிப்புக்கோர வேண்டும் என நாட்டிலுள்ள சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டல் மற்றும் சமபாலுறவாளர்கள், திருநங்கைகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி நாட்டிலுள்ள சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இன்று கொழும்பிலுள்ள லிப்டன் சுற்றுவட்டத்தில் அமைதிப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேற்படி போராட்டத்தில் ஜனநாயகத்திற்காக வண்ணாத்துப்பூச்சிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள், ஏழு வெள்ளிக்கிழமைகள் கடந்தும் தீர்வில்லை, என்னுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல, நீதி கோரும் பிரஜைகளுடன் நாமும் ஒன்றிணைவோம், வண்ணாத்துப்பூச்சிகளுக்குப் பயந்த ஜனாதிபதி, நீதித்துறையின் ஜனநாயகத்தினைப் பாதுகாப்போம், நியாயத்துவமான அரசியல் கலாசாரத்திற்காக ஒன்றிணைவோம், சர்வாதிகாரம் வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்த‍ை முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.