மைத்திரியின் தடையையும் மீறி ஆளும் கட்சிக்கு தாவிய சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் !

0

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்றைய தினம்(18) ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய சற்று நேரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஸ்மன் செனிவிரத்ன ஆகியோர் ஆளுங்கட்சி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டனர்.

இதேவேளை, ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(17) திடீர் தடை விதித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 21 பேரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.