மைத்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துக் கொண்டதால் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கும் நிகழ்வில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் பலர், ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

இளைஞர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியும் சளைக்காமல் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.

இரணைமடு குளத்தின் கட்டுக்களில் நின்ற இளைஞர்களே தமது கைப்பேசிகளில் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜனாதிபதியின் அதிரடி செயற்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை மாத காலமாக நாடு பெரும் நெருக்கடி நிலையை அடைந்துள்ளது.

இதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியே என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் இளைஞர்களின் செல்பி மோகம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.