மைத்திரி பதிவி விலகட்டும்! நாட்டின் பிரதமர் ரணிலே!!

0

அமைச்சின் செயலாளர்ளை அழைத்து பேசவோ, அவர்களுக்கு கட்டளைகளை பிறப்பிக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை . மேலும் “நாங்கள் ரணிலை பிரதமராக்குமாறு தொடர்ந்து அழுத்தம் வழங்கினால் தான் பதவி விலக நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்தார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நீதி மன்ற உத்தரவிற்கு ஜனாதிபதி கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் எங்களின் எண்ணத்தில் எவ்வித மாற்றமுமில்லை நாங்கள் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே முன்மொழிகின்றோம் ஜனாதிபதி அவரையே பிரதமராக நியமிக்க வேண்டும். அதனால் மைத்திரி பதவி விலகுவதைப் பற்றி எங்களுக்கு எந்த வித கவலையும் இல்லை.

நாடு இன்று அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந் நிலையில் ஆட்சியை எப்படி எடுப்பது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாது ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்.”என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.