யானையுடன் பேருந்து மோதி விபத்து – யானை உயிரிழப்பு ! படங்கள் இணைப்பு

0

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த யானை உயிரிழந்துள்ளது.

அத்தோடு பேரூந்தில் பயணித்த பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து, புத்தளத்திற்கு அருகில் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும் இந்த விபத்து காரணமாக பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளது

குறித்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்தவர்களுக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.