யாழில் மீண்டும் களமிறங்கிய விடுதலை புலிகள்! அதிர்ச்சியில் சிங்களவர்கள்

0

தமிழீழ விடுதலைப் போராட்டமானது 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மௌனித்துள்ளதே தவிர மரணிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

எமது ஒற்றுமையைக் குலைத்து இனத்தில் ஆளுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகள் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதைத் தாம் கண்காணித்து வருவதாகவும் ஆகையினால் அதிலிருந்து முற்றுமுழுதாக விலகி,

தமிழீழ கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கேற்ற வகையில் வாழ வேண்டுமென்றும் இதனை அலட்சிப்படுத்துவபவர்கள் மிகக் குறுகிய காலத்தில் தீவிரமான நடவடிக்கைகளுக்கு ஆளாகுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதிகளிலேயே இத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தமிழீழம் எனக் குறிப்பிடப்பட்டே இத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இத் துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது..

தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது நியாயப் போராட்டமானது ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களதும் பல் ஆயிரம் போராளிகளது தியாகங்களாலும் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறாகும்.

இந்தப் போராட்டத்தின் ஆயதப் போராட்டமானது 2009.5.18 மௌனித்ததே தவிர மரணமடையவில்லை என்பதையும் மௌனத்திற்குள் தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதையும் அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் இந்தப் பத்து வருட கால இடைவெளியில் சிங்கள இனவெறி அரசும் அதன் இனவாத அமைப்புக்களும் இடைவிடாமல் தொடர்ந்தும் தந்திரோபாயமான இனவழிப்பை பல்வேறு நகர்வுகளூடாக பாரியளவில் செய்து வருகிறது.

அதாவது எமது இளந் தலைமுறையினரிடம் போதைப் பழக்கத்தைப் பழக்குதல் ஆபாச சிந்தனைகளைத் தூண்டும் விதத்தில் அவர்களை தமது வலையமைப்பிற்குள் வீழ்த்துதல் கூட்டு வண்புணர்வுக்காகச் செயற்படுதல்,கிராமத்தில் குழுக்களை உருவாக்கி அவர்கள் கையிலே வாளைக் கொடுத்து மோதல்களை உருவாக்குதல், தேவையற்ற ஆர்ப்பாட்டப் பேரணிகளை உருவாக்கி அதனூடாக எமது தமிழினத்தில் வரலாற்றைக் கேவலப்படுத்துதல்,

தற்சமயம் இருக்கின்ற அரசியல் பலத்திற்குள் ஊடுருவி அவர்களைத் தனிமைப்படுத்தி தனித்தனியாகக் கட்சிகளை உருவாக்கி வாக்குப் பலத்தைச் சிதைப்பதும் இவற்றையெல்லாம் செய்துவிட்டு அவர்களை பல காலம் சிறையிலடைத்து,

எமது இனத்தின் பலத்தை ஆளுமையை ஒற்றுமையை குடும்ப நல்லுறவை பிரித்தாலும் புலனாய்வு ஊடாக எம்மினத்தை நாமே அழிக்கும் செயலை செய்கிறார்கள் என்பதை நாம் உங்களுக்கு மிகவும் தெளிவாக புரியும் படி அறியத் தருகின்றோம்.

இதை நாம் ஆணித்தரமாகவும் சொல்லி நிற்கின்றோம். நாம் பல்வேறு கோணங்களில் இருந்தும் திசையில் இருந்தும் தளங்களில் இருந்தும் கண்காணிக்கின்றோம் என்பதை உறுதிபடக் கூறுகின்றோம்.

மேற்படி விடயங்கள் இலங்கைப் புலனாய்வாளர்கள் தான் செய்கிறார்கள் எனத் தெரிந்தவர்கள் உடனடியாக உங்களை அதிலிருந்து முற்றுமுழுதாக விலகிவிடுபட்டு தமிழீழப் பண்பாடு, கலாசார நடைமுறைக் கேற்ற விதத்தில் வாழ வேண்டுகிறோம்.

இதைச் செய்யாமல் இந்த வேண்டுகோளை அலட்சிப்படுத்துவோர் மிகக் குறுகிய காலத்தில் எமது தீவிரமான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அறியத் தருகின்றோம்.புலிகளின் தாகம் தமிழீழத் தயாகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.