யாழ்ப்பாணத்தில் குளத்தில் குளிக்க சென்றவரிற்கு நேர்ந்த கதி!

0

யாழில் குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பத்தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசன் குலேந்திரன் (வயது-34) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குடும்பத்தலைவர் நேற்றுமாலை குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார். அவரைக் காணவில்லை என உறவினர்கள் நேற்றிரவு தேடியுள்ளனர்.

இந்த நிலையில் அவர் இன்று நண்பகல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.