யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியப் பெண் தற்கொலை !காரணம் என்ன ?

0

வடதமிழீழம், யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் இந்திய பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புடவை வியாபாரத்தின் நிமித்தம் தனது கணவருடன் வருகை தந்திருந்த இந்தியப்பெண்ணே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த ஒரு மாதகாலமாக கொட்டடி, நமசிவாயம் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் அவரது கணவருடன் வசித்து வந்துள்ளார். இதன்போது வயிற்று வலியென அடிக்கடி கூறியுள்ளார்.

இந்நிலைமையில் நேற்று இரவு நித்திரைக்குப் சென்றவரை காலையில் எழும்பி பார்த்த போது, தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.