யாழ்ப்பாணத்தில் வெள்ள அபாயம் ! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் தொண்டமனாறு தடுப்பணை கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன.

அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக வடமராட்சி கிழக்கில் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதால் வடமராட்சி நன்னீரேரியின் தொண்டமனாறு வான்கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதற்கமைய இதன் வான்கதவுகள் 3.8 அடி அங்குலத்தில் இன்று மதியம் நீர்ப்பாசணத் திணைக்களப் பொறியியலாளரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த நீரேரயின் வான் கதவுகள் திறக்கப்பட்டள்ளதால் இந்த நீர் கடலுக்குச் செல்லும் வாய்க்கால்களும் வெட்டி விடப்பட்டுள்ளன.

ஆகையினால் குறித்த பகுதியிகளில் நீராடுவதற்கு எவரையும் செல்ல வேண்டாமென்றும் கடற்தொழிலுக்குச் செல்கின்றவர்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அத்தோடு இதனை அண்மித்த பகுதிகளில் இருக்கின்ற மக்கள் மிக அவதானமாக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.