ரஜினியின் சுயரூபத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – நாஞ்சில் சம்பத்.!

0

தமிழக மக்களின் இன்னல்களில் பங்கெடுக்காமல், அவர்கள் துயரத்திலிருந்து மீள தோள்கொடுக்காமல் வெறுமனே திரைப்பிரபல்யத்தை மட்டுமே வைத்து தமிழகத்தின் முதல்வராகி விடலாம் என நினைத்துக்கொண்டிருந்த நடிகர் ரஜினியின் உண்மை முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப் பிரபலங்களின் மீதான ரசனையை திரையரங்கிற்கு வெளியேயே மக்கள் விட்டுவிட வேண்டுமென தெரிவித்துள்ளார் இலக்கிய சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்.

தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சிலார் தொடர்ந்து இலக்கிய சொற்பொழிவு, மாணவர்களுக்கான மேடைப்பேச்சு பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் உதிர்த்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் ரசிகர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறிய ரஜினி, தற்போது கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற டெல்டா மக்களை நேரில் சந்திக்கவோ, அவர்களுக்கு ஆறுதல் கூறவோ முனையவில்லை. எனவே, மக்கள் திரைப் பிரபலங்களை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். ரஜினியின் உண்மை முகத்தை புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.