ரணிலிடம் மீண்டும் சரணடைந்த ஜனாதிபதி மைத்திரி?!

0

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்க வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க டிசெம்பர் 16 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார்.

சிறிலங்காவின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை ஒக்டோபர் 26 ஆம் திகதி அதிரடியாக நீக்கியிருந்த ஜனாதிபதி மைத்ரி, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்ததுடன் அதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அரசியல் சாசனத்தை மீறி நவம்பர் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றிலும் அதேபோல் நீதிமன்றிலும் கடும் கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், எந்தவொரு நிலையிலம் பிரதமர் பதவியை மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்போவதில்லை என்று சூளுரைத்துவந்த மைத்ரிபால சிறிசேன, வேறு வழியின்றி தனது தீர்மானத்தில் பின்வாங்கியிருக்கின்றார்.

இதற்கமைய டிசெம்பர் 14 ஆம் திகதியான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொலைபேசி ஊடாக ரணிலை தொடர்புகொண்ட மைத்ரிபால சிறிசேன, பிரதமராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்ததாக அழைப்பு வந்தபோது ரணிலுடன் இருந்ததாக கூறும் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜித்த சேனாரத்ன ஐ.பீ.சீ தமிழுக்குத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.