ராஜீவ் கொலையில் எங்களுக்கு தொடர்பா? ‘பகீர்’ கிளப்பும் விடுதலைப்புலிகளின் அறிக்கை.!

0

முன்னாள் இந்திய பிரதமர் 1991 ஆம் ஆண்டு மே 21 அன்று தமிழகத்தில் (ஸ்ரீபெரும்புதூர்) தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். நாடே விக்கித்து பார்த்த அந்த கொலை சம்பவத்தில் புலிகளின் அமைப்பு ஈடுபட்டதாக பல தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டு எழுப்ப பட்ட போதிலும், புலிகளின் அமைப்போ அதனை மறுத்தே வந்திருக்குகிறது.

ஆனால், ராஜீவ் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் புலிகள் அமைப்புக்கு இதில் வலுவானதோர் கரம் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தீர்க்கமாக தெரிவித்து வரக்கூடிய சூழலில், நேற்றைய தினம் விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிக்கை என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ஓர் அறிக்கை வெளியானது.

அதில், மதிப்பிற்குரிய முன்னாள் இந்திய பிரதமர்கள் இந்திரா அம்மையார், ராஜீவ் காந்தி ஆகியோருடன் எங்களுக்கு நல்ல உறவே இருந்துவந்தது. ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருடன் நாங்கள் ரகசிய தொடர்பினை பேணி வந்தோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எங்களுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த சீரான உறவினை குலைக்க இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளே ராஜீவ் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் கொலையில் சந்திரா சாமி, சு.சாமி ஆகியோர் உள்ளிட்ட இந்திய அரசியல் ஆளுமைகளுக்கும் தொடர்புள்ளது, ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையான நடத்தப்படவில்லை என திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வரக்கூடிய சூழலில், புலிகள் மேற்கண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது தமிழக – இந்திய அரசியல் அரங்கை அதிரச்செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.