ராமர் கோவிலை கட்டாவிட்டால் மோடி அரசை கவிழ்ப்பேன் – சு.சாமி அதிரடி.!

0

உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசோ, உ.பி மாநில அரசோ எதிர்ப்பு தெரிவிப்பார்களேயானால் அந்த அரசுகளை கலைத்துவிடுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி.

கடந்த 2014 மக்களவை தேர்தலை எதிர்கொண்ட போது பாஜகவின் சார்பில் வைக்கப்பட்ட முக்கியமானதோர் கோரிக்கை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரக்கூடிய ராமர் கோவில் விவகாரத்திற்கென நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்பதுதான்.

பாஜகவின் மேற்கண்ட கோரிக்கைக்கு இந்துக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள இந்துக்களை தங்கள் பக்கம் அணி திரட்ட பாஜகவும் ராமர் கோவில் விவகாரத்தினை பயன்படுத்திக்கொண்டது.

ஆனால், ஆட்சிக்கு வந்து சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் ராமர் கோவில் விவாகரத்திற்கு பாஜக முக்கியத்துவம் அளிக்காத காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள இந்துத்துவ அமைப்புகள், பாஜகவை காட்டமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், டெல்லி பல்கலையில் நிகழ்ச்சி ஒன்றில் ‘நீதி, அரசியல், நம்பிக்கை’ என்ற தலைப்பில் உரையாற்றிய சுப்ரமணிய சாமி, “அயோத்தியில் உள்ள முஸ்லீம்களே ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில், மத்திய மற்றும் உ.பி அரசுக்கே எனக்கு எதிரியாக உள்ளன. அவர்கள் ராமர் கோவில் விவகாரத்தில் என்னை எதிர்க்க துணிவார்களேயானால் அவர்களின் அரசுகளை கலைத்துவிடுவேன்” என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.