றிசாத்தை வைத்து, தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களை குடியேற்றும் முயற்சி!

0

சிங்கள அரசு தமிழர் தாயகத்தை எந்தளவு வேகமாக அபகரிக்க முடியுமோ? எந்தளவு வேகமாக ஆக்கிரமிக்க முடியுமோ? எந்தளவு வேகமாக அழிக்க முடியுமோ? அந்தளவு வேகமாக யாவற்றையும் செய்து வருகின்றது. மகிந்த ஆண்டாலும் சரி, மைத்திரி ஆண்டாலும் சரி கூட வந்த நரி ரணில் ஆண்டாலும் சரி இது எல்லாம் மிக நன்றாக நடந்தே வருகின்றது. அப்படி ஒரு முயற்சியாகவே அமைச்சர் றிசாத்தின் கைகளில் நீண்ட கால இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் என்ற புதிய அமைச்சு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாட் பதியூதீன் எப்படிபட பட்டவர் என்பதையும் என்ன செய்தவர் என்பதையும் உலகமே அறியும்.இ எவருக்கும் எவரும் சொல்லத் தேவையில்லை. தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்தை இன்று முஸ்லீம்கள் வேகமாக அபகரித்து வர அங்குள்ள முஸ்லீம் தலைவர்களே காரணம். அவர்கள் சிங்கள அரசுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தை வேட்டையாடி வருகின்றனர். இன்றும்கூட நாளும் பொழுதுமாக முஸ்லீம்களால் கிழக்கு அபகரிக்கப்படுகின்றது.

ஒரு புறத்தில் அங்குள்ள தமிழ் மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் அம்பாறையிலும் முஸ்லீம்கள் இந்த அராஜக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. அங்குள்ள மக்களை மதம் மாற வற்புறுத்துகின்றனர். அம்பாறை மாவட்டத்தை முஸ்லீம்கள் வேகமாக வேகமாக அபகரித்துள்ளனர். அதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் இன்று முஸ்லீம் கிராமங்களாக மாறிவிட்டன.

கடந்த சில மாதங்களின் முன்னர் ஒரு தமிழ் குடும்பத்தின் வீடு, உடமைகள் எல்லாம் முஸ்லீம்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறும் அல்லது ஊரை விட்டு செல்லுமாறும் அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் அவ்வாறு மிரட்டப்பட்ட நிகழ்வு வடக்கு கிழக்கு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கிழக்கு மாகாணத்தில் இந்தளவுக்கு இவர்களின் அராஜகம் தலைதூக்கிவிட்டது.

அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தின் நிலமை இப்போது மட்டக்களப்பும் ஏற்படுகின்றது. மட்டக்களப்பை சுருட்டுவதற்கு முஸ்லீம்கள் கடுமையாய் நிற்கின்றனர்.

காணிகளை காசு கொடுத்து வாங்க முயற்படுகின்றனர். கிராமம் கிராமமாக வாங்க நிற்கின்றனர். எப்படியேனும் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து, அங்கு குடியேறி தமது சந்ததியை பெருக்கி, தமது நிலம் ஆக்குவதற்கு அவர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்குத்தான் இந்த நிலைமையில் இருக்கிறது என்று பார்த்தால் வடக்கிலும் முஸ்லீம் பெருச்சாளிகள் நுழையப் பார்க்கின்றன. வடக்கில் அமைச்சர் றிசார்ட் (இவர் எப்போதும் அமைச்சர்தான். மகிந்த ஆண்டாலும் அமைச்சர். ரணில் ஆண்டாலும் அமைச்சர்) வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் துணையுடன் பெருமளவான முஸ்லீம்களை குடியேற்றியுள்ளார். இவர் வடக்கில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் இந்த மாவட்டங்களில் வெளியில் இருந்து கொண்டு வந்த முஸ்லீம்களை குடியேற்றியுள்ளார்.

இவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி, மகிந்தவுடன் இணைந்து தனக்காக வாக்கு வங்கிக்காக முஸ்லீம்களை குடியேற்றினார். குறிப்பாக 2009 யுத்தம் முடிந்த காலத்தில், தமிழ் மக்கள் எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்த காலத்தில் றிசார்ட் இந்த கைங்கரியத்தை செய்தார். இதற்கு சில தமிழ் இன துரோகிகளும் துணை நின்றார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் செய்துவிட்டு, றிசார்ட்டுன் சேர்ந்து வேலைக்காக முஸ்லீம்களை குடியேற்றினார்.

றிசார்ட்டிற்காக வாக்கு கேட்டனர். ஆனந்தி, ரஜனி போன்ற துரோகிகள் பற்றி தமிழ் இணைய ஊடகங்கள் ஆதவாரங்களை வெளியிட்டுள்ளன. இந்த கயவர்களுடன் றிசார்தட் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும், மன்னாரிலும் முஸ்லீம்களை குடியேற்றியுள்ளார்.

முல்லைத்தீவில் வற்றாப்பனை கண்ணகி அம்மன் ஆலயத்தை அண்டிய பகுதியில் தமிழர்களின் காணிகளில் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

அதைப்போல பல தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் காடுகளை அழித்து முஸ்லீம்களை திட்டமிட்ட அரசியல் நோக்கிற்காக றிசார்ட் குடியேற்றியுள்ளார்.

இப்போது இந்த றிசார்ட் பதியூதீனுக்கு நீண்டகால இடம்பெயர் மீள்குடியேற்ற அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. 90களில் முஸ்லீம்கள் வெளியேற்றத்தை வைத்து பல இலட்சம் முஸ்லீக்களை இனி றிசார்ட் பதியூதீன் குடியேற்றுவார். அத்துடன் சிங்கள மக்களையும் குடியேற்றுவார். இதற்குதான் மைத்திரிபால சிறிசேன றிசார்ட் பதியூதீனை இந்த அமைச்சராக நியமித்துள்ளார். ரணிலும் தனக்கு கைகொடுத்த தமிழ் கூட்டமைப்புக்கு இவ்வாறு நன்றி காட்டியுள்ளார்.

ஆனால், றிசார்ட் பதியூதீன் எமது மண்ணில் குடியேற்ற அராஜகங்களை செய்ய தமிழர்கள் இடமளிக்க கூடாது. அத்துடன் சிங்கள மக்களை குடியேற்றவும்தான் இனி இளைஞர்கள் இவைகளுக்கு எதிராக போராடுவார்கள்.

கடந்த காலத்தில் போல மகிந்தவும் றிசார்ட் பதியூதீனும் தமது அராஜக வேலைகளை தமிழ் நிலத்தில் செய்ய இயலாது. கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் இளைஞர் சமூகம் விழித்துவிட்டது. எந்த நீண்ட கால அமைச்சரும் எங்கள் மண்ணில் தங்கள் திருவிளையாடலை காட்ட முடியாது.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
23.12.2019

Leave A Reply

Your email address will not be published.