வடக்கில் இன்றும் மழை பெய்யலாம்; மக்களின் அவதானத்திற்கு!

0

இலங்கைக்கு தென்கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழ்வு நிலையின் பின்னரான மாற்றங்களால் வடக்கில் இன்றைய தினமும் மழை பெய்யலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் இன்றைய தினம் மழையுடனான கால நிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை எதிர்பார்கப்படுகிறது. குறிப்பாக மேற்கு, மத்திய, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தில் பெய்த கடும் மழை பல குடும்பங்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.