வடக்கு கிழக்கின் முன்னணி உயர்தரப் பெறுபேறுகள்!

0

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்டத்தில் முதலிடம்!

சற்று முன்னர் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி பௌதீக விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித். இவர் தேசியரீதியில் ஆறாமிடத்தையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார். நவனீதன் கிருஷிகா என்ற மாணவி தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

தற்போது உயர் தரப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.

தி/நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவன் எம்.டிலக்சன் பொறியியல் தொழிலுநுட்பப்பிரிவில் மாவட்ட நிலையில் முதலிடம்

திருகோணமலை மாவட்டத்தில் தி/நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவன் எம்.டிலக்சன் பொறியியல் தொழிலுநுட்பப்பிரிவில் மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உயர்தர கணித பிரிவில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி முகம்மத் பர்ஹாத் பெற்றுள்ளார். இவர் மாவட்டத்தில் 1ஆம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 20ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

கிளிநொச்சியின் முன்னணி பெறுபேறுகள் கிராமபுறம் வசமானது. சாதனை படைத்த மாணவிகள்!

கிளிநொச்சி கணிதப் பிரிவு மாவட்ட முதல் நிலை புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி (பரந்தன்) பெற்றுள்ளார்.

அத்துடன் விஞ்ஞானப் பிரிவில் முதல் நிலையை பளை மத்திய கல்லூரி மாணவி க.அபிசிகா( முரசு மோட்டை) பெற்றுள்ளார்.

இதேவேளை கலைப்பிரிவில் சுதானந்தன் திகழினி மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார். இவர் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.