வதந்திகள் அனைத்தும் வதந்தியே.. அமெரிக்காவில் கம்பீரமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய விஜயகாந்த்!

0

தேமுதிக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த தனது உறவினர்களுடன் அமெரிக்காவில் அசத்தலாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

விஜயகாந்த் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயர்தர சிகிச்சைக்கு அடிக்கடி அமெரிக்காவும் சென்று வருகிறார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த போது விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.இதனால் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு சென்னை வந்த அவர், கருணாநிதியின் சமாதிக்கு நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்பு சென்னையில் சிகிச்சையை தொடர்ந்த அவர், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா,அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுனர்.

இந்நிலையில், இரண்டு தினங்களாக விஜயகாந்த் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அமெரிக்காவில் எடுத்து வரும் சிகிச்சையில் எந்தவித பலனும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்பதை நிரூப்பிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் கம்பீரமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் வாய்டைக்க வைத்துள்ளது.

இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை விஜயகாந்த் அமெரிக்காவில் இருக்கும் தனது நண்பர்கள் மற்றும் உறவினருடன் கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் இன்று காலை பகிர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் ஆரோக்கியமாக கம்பீரத்துடன் வீற்றிருப்பது தேமுதிக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.