வன்னியில் இரவு பயணங்களின்போது காத்திருக்கும் பேரதிர்ச்சி! படங்கள் இணைப்பு

0

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் இரவு வேளைகளில் வீதிகளிலிருந்து யானை அச்சுறுத்துவதாக பொது மக்களும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் செல்லும் வீதியில் நடுவே நின்றிருந்த யானையால் வாகனத்தில் பயணித்த பயணிகள் பதற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு வாகனங்களில் இரவு வேளைகளில் செல்லும்போது யானையின் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

இரவுவேளைகளில் பிரதான வீதிகளில் யானைகளின் நடமாட்டத்தால் வாகனங்கள் பயணிப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் அண்மைய காலங்களில் அதிகளவான யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுகின்றது. வேறு பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு யானைகளை எடுத்து வந்து விட்டுள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் நெடுங்கேணியில் இருந்து முல்லைத்தீவு , ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளினூடாக பயணங்களை மேற்கொள்ளும் போது இவ்வாறு யானைகளின் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வேண்டும் எனவும் வாகனச்சாரதிகள் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.