வவுணதீவு கொலையை செய்தது கோத்தாவின் எலிப்படை தளபதி கருணாதான்!

0

ஸ்ரீலங்காவின் அரசியல் உலகின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாக மாறிவிட்டது. சிங்களப் பேரினவாதிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அதிகார சண்டை காரணமாக நாட்டில் அரசும் இல்லை. அமைச்சரவையும் இல்லை. பிரதமரும் இல்லை. இப்போது மகிந்த ராஜபக்ச குழு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக புலிக் கதையை ஆரம்பித்துள்ளது. இதுநாள் வரை மைத்திரியை புலி என்று சொன்னவர்கள், இப்போது ரணிலை புலி என்று சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.

சிங்கள அரசை போல கேவலமான அரசு ஒன்று உலகில் இல்லை. சிங்களவர்களைப்போல கேவலமான சனங்களும் உலகத்தில் இல்லை. பொய்யும் புரட்டும் கள்ளத்தனமும் கொண்ட அவர்களின் வரலாறும் அரசியலும்தான் ஈழத் தமிழ் மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது. சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய ஈழத் தமிழ் மக்கள், அதன் ஊடாக எந்தப் பலன்களையும் அடைய முடியாது என்ற நிலையில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இறங்கினார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வரலாறும் நிகழ்வுகளும் தெளிவாக தெரிவிக்கப்பட்டவை. அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல ஈழப் போராட்டம். அப்பாவி ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்து அவர்களை இனப்படுகொலை செய்து ஒழித்து வந்த சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரால் பல்வேறு கொலைகளை தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் நடாத்தியது. சிங்கள இராணுவமும் ஒட்டுக் குழுக்களும் இணைந்து இந்த வேலைகளை செய்தனர்.

அன்றைய காலத்தில் வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் சிங்கள மக்கள்மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் இந்த ஒட்டுக்குழுக்களே. குறிப்பாக மகிந்த ராஜபக்ச போன்ற சிங்கள இனப்படுகொலையாளர்களின் பின்னால், இந்த ஒட்டுக்குழுக்கள் ஒளிந்திருக்கின்றன. தற்போது மகிந்த ராஜபக்ச மறு பிரவேசம் மேற்கொண்டதும் ஒட்டுக்குழுக்கள் புற்றிலிருந்து கிளம்புகின்றன. வடக்கில் டக்ளஸ், சந்திரகுமார் குழுக்களும் கிழக்கில் கருணா பிள்ளையான் குழுக்களும் தமது அராஜகங்களை தொடங்கியுள்ளன.

இதன் வெளிப்பாடே வவுணதீவு சம்பவம். இதனை வைத்து கருணா விடுதலைப் புலிகளுடன் முடிச்சு போட எத்தணித்தார். அத்துடன் மீண்டும் புலிகள் வந்துவிட்டனர் என்றும் பூச்சாண்டி காட்டினார். எதிரிக்கும் துரோகிக்கும் சண்டை வந்தால் சில உண்மைகள் வெளியில் வரும். ஈழத் தமிழரையும் விடுதலைப் போராட்டத்தையும் கருணா சிங்கள இராணுவத்திற்கு எதற்காக காட்டிக் கொடுத்தார் தெரியுமா? அதற்கான பதிலை சரத்பொன்சேகா சொல்லியுள்ளார்.

சிங்கள அரசுக்கு துரோகி கருணா காட்டிக் கொடுத்தற்காக அவருக்கு மில்லியன் கணக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு கருணா இரவு முழுக்க நட்சத்திர விடுதிகளில் குடித்து பெண்களுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இறுதி யுத்த இரகசியங்கள் ஏதும் கருணாவுக்கு தெரியாது என்றும் அவர் இரவு விடுதிகளிலேயே தனது காலத்தை கடத்தி பணத்தை அழித்ததாகவும் பொன்சேகா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை அழிக்க நானே உதவினேன் என்று கருணா சொல்கிறார். ஆனால் போரில் கருணாவுக்கு பங்கில்லை என்கிறார் சரத்

இங்கே அழகான யுத்தம் ஒன்று நடக்கிறது. போரை நடத்திய மகிந்த ராஜபக்ச, சரத்பொன்சேகா, கருணா இவர்கள் எல்லாம் அடிபடுகின்ற காலம் ஒன்று வரும் என எவரேனும் நினைத்தோமா? நன்றாக அடிபடட்டும். வர வேண்டிய பல உண்மைகள் இருக்கின்றன. பொட்டம்மான் உயிரோடு இல்லை என்றும் விடுதலைப் புலிகள் எவரும் இல்லை என்றும் சரத்பொன்சேகா கூறியுள்ளார். எல்லோரையும் இனப்படுகொலை செய்துவிட்டோம் என்ற முக்கியமான,.இனப்படுகொலை வாக்குமூலம் இது.

சரத்பொன்சேகா இப்படிச் சொல்கிறார். ஆனால் கோத்தபாயவும் மகிந்தவும் வேறு கதை சொல்கிறார்கள். கருணா செய்த வவுணதீவு பொலிஸ் கொலையை வைத்துக் கொண்டு, புலிகள் மீள வந்துவிட்டனர் என்று கதை பேசுகின்றனர் இவர்கள். ரணில் இராணுவத்தினரை பலவீனப்படுத்தியதால் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்றும் தற்போது மகிந்த ராஜபக்சவே நாட்டுக்கு அவசியம் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கிறா்ர். ஆக, எதற்காக வவுணதீவு பொலிஸ் படுகொலையை செய்தீர்கள் என்பது நன்றாக தெரிகிறது.

கருணாவும் கோத்தாவும் மண்டையில உள்ள கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்கள். அது கோத்தபாயவின் புலிப்படையல்ல. கோத்தாவின் எலிப்படைதான் வவுணதீவு கொலையை செய்தனர். அது மாத்திரமல்ல, புலம்பெயர் புலிகளின் தேவைக்காகத்தான் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுகின்றதாம். அதில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு முதல்வருக்கு கீழ் கொண்டுவரப்படுகின்றதாம். இதனை தடுக்கவும் மகிந்த தேவையாம். மைத்திரி ஜனாதிபதியாக இருந்தபோது நரி ரணில் பிரதமராக இருந்தபோது இப்படி எல்லாம் நடக்குமா? எந்தச் சிங்களவன் ஆவது இதற்கெல்லாம் உடன்படுவானா?

மைத்திரியின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் கழுதை தேய்ந்து கட்டறும்பு நிலையில் இருக்க கோத்தபாய ராஜபக்ச எப்படி எல்லாம் அடித்து விடுகின்றார். தமிழர்கள் புலிகள் இல்லாத இக் காலத்தில் எத்தகைய துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். நல்ல தலைவர்கள் இல்லை. எல்லாப் பக்கங்களிலும் எல்லா கட்சிகளிலும் சுயநலவாதிகளும் ஊழல் பேர்வழிகளும் தான் உள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினையை வைத்து பிழைக்கின்றனர். யாவாரம் செய்கின்றனர். நிலமை இப்படித்தான் இருக்கிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் இல்லை என்ற துணிச்சலில் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். புலிகள் இயக்கம் மீண்டும் வராதா என்று ஈழ மண் ஏங்கிக் கிடக்கிறது. ஆனால் புலிகள் இயக்கம் மீண்டும் வந்தால் புதிய வடிவத்தில், எவரும் எதிர்பாராத நகர்களுடன் வரும். அற்பத்தனமாக அப்பாவி பொலிஸாரை கொல்ல வேண்டிய தேவைகள் தமிழர்களுக்கும் இல்லை. புலிகளுக்கும் இல்லை. தவிரவும் புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிங்கள அரசுக்கு புலிகள் தேவைப்படுகின்றனர். புலிகளின் பெயரால் வன்முறைகளை நிகழ்த்தி, புலிகளுக்கு எதிராகவும் தமக்கு ஆதாயமாகவும் காரியங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தமிழர்களுக்கு விடுதலைக்காகவும் நிலத்தை மீட்கவும் புலிகள் தேவைப்படுகின்றனர். ஆனால் சிங்களவர்களுக்கு கோத்தபாயக்களுக்கு தெற்கில் தங்கள் அரசியல் இருப்பை தக்க வைக்க புலிகள் தேவைப்படுகின்றனர். புலிகளைப் பற்றிய பிரசாரங்கள் தேவைப்படுகின்றன. சிங்கள அரசு புலிகளின் கல்லறைகளை உடைத்து அதனுடன் போர் புரிந்து கொண்டிருக்கிறது.

வரலாறு முழுவதும் இப்படிச் செய்தால் இதன் விளைவுகள் வேறு விதமாக அமையும். அது சிங்கள அரசை பொடிப் பொடியாக சிதைத்தும்விடலாம். நெடுநாள் விளையாட்டு நல்லதல்ல. சிங்களப் பேரினவாதிகள் விதைக்கும் இந்த வினைகளை அவர்களே அறுப்பார்கள். புதிய வரலாறு எழுதப்படும்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
09.12.2018

Leave A Reply

Your email address will not be published.