வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ! அனைவரும் பகிரவும் ! ஜாக்கிரதை மக்களே

0

வவுனியாவில் கடந்த சில காலங்கலாக வவுனியாவில் உள்ள படிச்ச மாணவர் மாணவிகளை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன கொள்ளை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வவுனியாவில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளின் பட்டியலை தெரிந்து எடுத்த சில மர்ம நபர்கள் அவர்கட்கு இலங்கையில் உள்ள பிரபல வங்கியின் பெயரை குறிப்பிட்டு அதில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் எனவே அந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பம் கோருவதாயின் குறித்த ஒரு தொலை பேசி இலக்கத்திற்கு குறிப்பிட்ட ஒரு பணத்தொகையை Easy cash மூலம் முதலீடு செய்யுமாறும் அதன் பின் தங்களுக்கு நேர்முக தேர்வு இடம்பெறும் எனவும் குறிப்பிட்டு பணம் வசூழித்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியாவில் உள்ள சில பிரமுகர்களின் பெயரை கூறி அவர்கள் தான் உங்களுக்கு சிபாரிசு செய்தார்கள் எனவும் பொய்யான வதந்தியை கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் இது குறித்து பல முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளதுடன் இவ்வாறான போலி தகவல்களை நம்பி யாரும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்று பொலிஸாரும் பாதிக்கப்பட்ட நபர்களும் வவுனியா மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி நிற்கின்றதுடன் இவ்வாறான தொடர்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை நாடுமாறும் கேட்டு நிற்கின்றனர்.

எனவே போலி நபர்களை வெளியில் கொண்டுவர உதவிடுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.