விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கள்ளக்காதல் கதாநாயகி அபிராமி ! கேமராவை பார்த்தவுடன் என்ன செய்தார் தெரியுமா?.வைரலாகும் வீடியோ

0

சென்னை அடுத்துள்ள குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.

அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை தெரிந்துக் கொண்ட விஜய், அபிராமியை கடுமையாக கண்டித்தார். இதையடுத்து, தன் குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்துக் கொடுத்து கொன்ற அபிராமி, வீட்டை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய குன்றத்தூர் போலீசார், அபிராமியை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள அபிராமி ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நாளை (டிசம்பர் 21) முதல் விசாரணை தொடங்க உள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காஞ்சிபுரம் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ளட்டும் என கூறி, முன்னதாக அபிராமியை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது முகத்தை மூடி கொண்டு வந்தார் அபிராமி வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ…

Leave A Reply

Your email address will not be published.