விடுமுறையை கழிக்க குடும்பத்தாருடன் பெங்கொக் சென்ற மைத்திரி!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து பெங்கொக் சென்றுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களை அடுத்து அதிலிருந்து விடுபட்டு தமது விடுமுறையை ஓய்வாக குடும்பத்துடன் கழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து சென்றுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுவருடத்திற்கு முன்னதாக நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இந்த விடுமுறையில் ஜனாதிபதியின் நணபர் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும். இந்த விடுமுறையானது அவரின் தனிப்பட்ட விடுமுறை என்பதனால் ஜனாதிபதியின் விடுமுறையின் போது புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.