விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் பரிதாப நிலையில்!

0

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார்.

இருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது என்ன விஷயம் என்றால் மஞ்சு வாரியர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.

அப்போது ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ பயங்கர விபத்து அங்கு ஏற்பட்டிருக்கிறது அதில் தான் மஞ்சு வாரியர் சிக்கியதாக கூறுகின்றனர்.

ஆனால் அவரை படக்குழுவினரோ உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.