வெகு விமர்சையாக நடைபெற்ற இஷா அம்பானி திருமணம் ! வாயை பிளந்த விருந்தாளிகள் ! படங்கள் உள்ளே

0

இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது.

இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது.

மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன.

திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த்,

அவரது மனைவி லதா ரஜினிகாந்த், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஐஸ்வர்யாராய்,

கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பிரபலங்களின் அணிவகுப்பால் மும்பையே பரபரப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.