திமுகவுக்கு தாவும் செந்தில் பாலாஜி ; கலைகிறதா தினகரனின் கூடாரம்!

0

Pஅதிமுகவின் அதிகாரபூர்வ பெயரும், கொடியும், சின்னமும் ஓபிஎஸ் – எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தரப்புக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தனித்து இயங்க வேண்டியிருந்த காரணத்தினால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினை தொடங்கி நடத்திவருகிறார் சசிகலாவின் உறவினர் தினகரன். ஆர்.கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டது தொடங்கி, இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியலைகளால் தினகரன் பக்கம் குழு சேர தொடங்கியது.

ஆனால், முதல்வரை மாற்ற கோரி ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள காரணத்தினால் தினகரன் அணியிலிருந்து மீண்டும் அதிமுகவுக்கு செல்ல முயன்றுவருகின்றனர் தினகரன் ஆதரவு முக்கிய புள்ளிகள் சிலர். இதனை சுட்டிக்காட்டிய கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கூடு திரும்பும் பறவைகள் என தலையங்கம் தீட்டியிருந்தது அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மா.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சரும், தினகரனின் முக்கிய ஆதரவாளருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவ உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நல்லதோர் இடமளித்து செந்தில் பாலாஜியை திமுகவுக்குள் ஐக்கியப்படுத்த திமுக தலைமையும் சம்மதித்துவிட்டதாக தெரிகிறது.

விரைவில் திமுக தலைமையகத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் செந்தில் பாலாஜி திமுகவில் இணையக்கூடுமென்ற தகவலால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது தினகரன் தரப்பு.

Leave A Reply

Your email address will not be published.