பயங்கரப் பொறியில் சிக்கிய மைத்திரி! பதவியையும் இழக்கலாம்!!

0

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புத் தொடர்பான தீர்ப்பு இன்று மாலை நான்கு மணிக்கு வெளிவரவுள்ள நிலையில் ரணில் தரப்பும் மைத்திரி-மஹிந்த தரப்பும் பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தீர்ப்பு இவ்வ்வாறுதான் அமையப்போகின்றது என்பதுதொடர்பில் தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்காத நிலையில் குறித்த தரப்புக்கள் சற்றுக் குழப்பமான நிலையிலேயே காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரானதாக நீதிமன்றத் தீர்ப்பு அமையுமாயின் அந்த தீர்ப்பை முன்னிறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் வியூகமைத்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் தீர்ப்பு மாறுமாயின், அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரிதான் என ஒரு தீர்ப்பினை மைத்திரிக்குச் சாதகமாக நீதிமன்றம் வழங்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தீர்ப்பு வெளிவர இன்னும் சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் இலங்கையில் பலதரப்பட்டோரும் பலத்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.