காலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்? இதைப் படிங்க முதல்ல…

0

அதிகாலையில் எழும்போது, அன்றைய தினத்துக்கான வேலைகளைப் பரபரப்பில்லாமல் பொறுமையாகத் தொடங்க முடியும். அன்றைய தினத்துக்கான வேலைகளைச் செய்வதற்கு போதுமான நேரமும் கிடைக்கும்.

காலையில் 9 மணிக்கும் இழுத்துப் போர்த்தி தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர்கள். மார்னி லிஷ்மேன், பெய்லி போஷ் ஆகிய இரண்டு நிபுணர்களும் மேற்கொண்ட ஆய்வில் காலையில் 6 மணிக்கு எழும் பழக்கமுள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைவு என்று தெரியவந்துள்ளது.

காலை தூக்கம்

அப்படியென்றால் தாமதமாக எழுபவர்களுக்கு மனஅழுத்தத்துக்கான வாய்ப்புகள் அதிகம் என்றுதானே அர்த்தம். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “மனிதர்கள் பொதுவாக வெளிச்சத்தில் வேலைகளைச் செய்துவிட்டு, இருட்டிய பின்னர், இரவில் தூங்கச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இன்றைய சமுதாயம் இயற்கைக்கு மாறாகச் செயல்பட்டு, இரவு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, பகலில் அதிக நேரம் தூங்குகிறார்கள். 

மனஅழுத்தம்

அதனால் சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைக்கும் பயன்கள் அனைத்தையும் இழந்துவிடுகின்றனர். அதிகாலையில் எழும்போது, அன்றைய தினத்துக்கான வேலைகளைப் பரபரப்பில்லாமல் பொறுமையாகத் தொடங்க முடியும். அன்றைய தினத்துக்கான வேலைகளைச் செய்வதற்கு போதுமான நேரமும் கிடைக்கும்” என்று கூறுகின்றனர்.

காலை தூக்கம்

மேலும் தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னரே டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு ஒரே நேரத்தில் தூங்கி காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாக்கிக்கொண்டால் நமது உயிரியல் கடிகாரம் சரியாக இயங்கும். இந்த மாற்றம் சற்று கடினமாக இருந்தாலும் உடலுக்கு மனதுக்கு பெரும் நன்மையைத் தரும் என்றும் அட்வைஸ் தட்டி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

Leave A Reply

Your email address will not be published.