13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 4 காமுகன்கள் ! ஆசை வார்த்தை கூறி வசதியான பெண்களை காம வலையில் வீழ்த்திய கொடுமை

0

வேலூர் மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு படித்தும் வரும் 13 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டல் உரிமையாளர் பைரோஸ் அகமது என்பவரின் மகள் பாத்திமா (வயது 13) அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்

. இவர் கடந்த 2 ஆண்டு காலமாக சக மாணவிகளுடன் அதே பகுதியை சேர்ந்த வாடகை ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார்.

கடந்த 10 மாதங்களாக மாணவி ஆட்டோவில் பள்ளிக்கூடம் சென்று வந்தபோது தினமும் இபான் அகமது, ஆட்டோ ஓட்டுனருடன் முன் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு அந்த மாணவியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து நட்பை ஏற்படுத்தி உள்ளான்.

மேலும் அந்த சிறுமியை கவர்வதற்காக அவ்வப்போது பரிசுகளை வழங்கியுள்ளான்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் அந்த மாணவி மட்டும் தனியாக பள்ளிக்கு செல்வதை நோட்டமிட்ட இபான் அகமது, தனது கூட்டாளிகளுடன் காரில் சென்று ஆட்டோவை மறித்து, காரில் செல்வோம் என கூறியுள்ளான்.

காரில் செல்வதால் மகிழ்ச்சியடைந்த மாணவி நம்பி சென்றுள்ளார். பின்னர், பெங்களுருக்கு தனியார் ஹொட்டலுக்கு அழைத்து சென்று நான்கு பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை செல்போன் வழியாக கண்டறிந்த பொலிசார் உடனடியாக பெங்களுரூ விரைந்தனர். ஹோட்டல் அறையில் இருந்த மாணவியை மீட்டனர்.

மாணவியை கடத்திய பெங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ஆட்டோ டிரைவர் அர்ப்பான், இர்பான்கான், முதாசீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் வசதியான பெண்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு வசதியான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக நாடகமாடி கல்யாணம் செய்துக்கலாம் என கடத்தி சென்றுள்ளான்.

இதேப்போல் ஒரு ஹோட்டல் அறையில் அந்த பெண்ணை தன்னுடன் வைத்துக்கொண்டு நண்பர்கள் மூலமாக அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு விட்டுள்ளான் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.