6 வயது தங்கையை திருமணம் செய்துகொண்ட 6 வயது அண்ணன் ! வினோத செய்தி !படங்கள் உள்ளே

0

தாய்லாந்து நாட்டில் இரட்டையர்களான அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவருக்கும் அவரது குடும்பத்தார் கோலாகலமாக திருமணம் செய்துவைத்துள்ளனர்.

தாய்லாந்தின் Amornsan Sunthorn Malirat மற்றும் Phacharaporn தம்பதியினருக்கு 2012 ஆம் ஆண்டு Guitar, Kiwi என்ற இரட்டை பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் ஆவார்.

புத்தமதத்தில், இவர்கள் கர்மா என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, ஆணும், பெண்ணும் ஒட்டிப்பிறந்தால் முந்தைய ஜென்மத்தில் இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். அந்த காரணத்தினாலேயே இவர்கள் இப்போது ஒன்றாக பிறந்துள்ளனர் என புத்த மதத்தினர் நம்புகின்றனர்.

இதனால், இவர்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.

இவ்வாறு, சிறு வயதில் திருமணம் செய்து வைத்தால், இவர்கள் எதிர்காலத்தில் நல்ல வளத்துடன் வாழ்வார்கள் என நம்புகின்றனர். இதனால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

Guitar தனது தங்கையை திருமணம் செய்துகொள்வதற்காக 200,000 baht தொகை மற்றும் £1,000 மதிப்பிலான தங்க நகைகளை வழங்கியுள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.