600 கிலோ எடையை 300 கிலோவாகக் குறைத்த இளைஞன்: வியக்க வைக்கும் மாற்றம் ! பலே பலே குண்டு பையா ! படம் உள்ளே

0

600 கிலோ எடை கொண்ட நபர் ஒருவர் தன்னுடைய எடையை 300 கிலோ அளவிற்கு குறைத்துள்ளார்.

மெக்சிகோவின் அகுவாஸ்கேலினேட் பகுதியைச் சேர்ந்த ஜூவான் பெட்ரோ பிராங்கோ (34) கடந்த 2016 ஆம் ஆண்டு 595 கிலோ எடை இருந்தார்.

இதன்மூலம் அதிக எடை கொண்ட மனிதர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தார்.

படுத்துக் கொண்டே இருந்த காரணத்தினால், அவருக்கு சர்க்கரை நோய் ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்சனை ஆகியவை அதிகமாக இருந்தது.

இதனைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் மாத்திரமே வாழ முடியுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தன் சொந்த மாநிலத்திலிருந்து மேற்கு பகுதியில் உள்ள கவுடலராஜாவுக்கு குடும்பத்தினருடன் குடிபெயர்ந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சைகள், தொப்பையை குறைப்பதற்கு மாத்திரைகள் மற்றும் அவருக்காகவே பிரத்யோகமான உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன.

உடற்பயிற்சி உபகரணங்களை வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததால், அவரின் எடை படிப்படியாக குறைந்தது.

595 கிலோவில் இருந்த நபர் தற்போது 291 கிலோவாக உள்ளார். சுமார் 300 கிலோ அளவிற்கு எடையைக் குறைத்துள்ளதால் தனது கின்னஸ் சாதனையை இழந்தார்.

இது குறித்து ஜூவான் கூறுகையில்,

நான் 6 வயதில் இருந்த போதே 60 கிலோ எடை இருந்தேன். அதன் பின் என்னுடைய எடை அதிகரித்தே சென்றது.

பிறந்ததில் இருந்தே எடை அதிகரித்து கொண்டே இருந்ததால், அதைப் பற்றி நினைத்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்.

17 வயதில் கார் விபத்தில் சிக்கினேன். இதனால் என்னுடைய எடை மேலும் அதிகரித்தது.

இரண்டு வருடங்களுக்குப் பின் முடிவு எடுத்து எடை குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன். அதன் பயனாக இவ்வளவு எடை குறைத்துள்ளேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.