BREAKING: விஷால் கைது அதிர்ச்சியில் திரையுலகம்.!

0

Vishal Arrest

Actor Vishal : நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் புரட்சி தளபதி விஷால். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்.

மேலும் தயாரிப்பாளர் பலரும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி செய்து விட்டதாகவும் ரூ 7 கோடி வரை ஊழல் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தி தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.

இதனையடுத்து விஷால் இன்று போடப்பட்ட பூட்டை திறக்க முயன்ற போது போலீசார் விஷாலை கைது செய்துள்ளனர். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஷால் கைது செய்யப்பட்டதில் எந்தவித அரசியலும் இல்லை. தயாரிப்பாளர் சங்க விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.