அணில் குஞ்சுக்கு வழிவிட்ட இரக்க மனம் உள்ள இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் ! படங்கள் உள்ளே

0

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த நபர் வீதியைக் குறுக்கீடு செய்த அணில் குஞ்சுக்கு வழிவிடுவதற்காக வேகத்தடையை (பிறேக்) சடுதியில் அழுத்தியுள்ளார்.

இந்நிலையில் செட்டிபாளையம் பகுதியிலிருந்து வயலில் பூசை செய்வதற்காக பூசைப் பொருட்களுடன் பின்னால் வந்த முச்சக்கரவண்டி குறித்த நபரின் உந்துருளியுடன் மோதிக்கொண்டது.

இதனால் இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய இரண்டும் கடும் சேதத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.