அரபு நாட்டில் திடீரென தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்; நான்கு மாதங்கள் கழித்து உடல் சொந்த ஊரில்!

0

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் Dammam நகருக்கு கார் ஓட்டுனர் பணிக்காக சென்றார்.

இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் திகதி தினேஷ்குமார் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் தினேஷ்குமாரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டும், வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டும் அவர்கள் முயன்ற நிலையில் சடலத்தை கொண்டு வரமுடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில் பெரும் போராட்டத்துக்கு பின்னர் அனைத்து விதமான சிக்கல்களும் தீர்க்கப்பட்டு தினேஷ்குமாரின் உடல் நேற்று சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

அவரின் சடலத்தை பார்த்து குடும்பத்தார் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

இதன்பின்னர் இன்று தினேஷ்குமாரின் இறுதிச்சடங்குகள் நடந்தது. இதில் உள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.